மதுரையில் ரூ.16 லட்சம் மதிப்பிலான நியாய விலை கடைகள் திறப்பு விழா - அமைச்சர் முதல் விற்பனையை துவங்கி வைத்தார்.

Published Date: January 21, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரையில் ரூ.16 லட்சம் மதிப்பிலான நியாய விலை கடைகளை திறந்து வைத்து நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி 76 வது வார்டு மேளவாசல், திடீர் நகர் பகுதியில் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூபாய் 16 லட்சம் செலவில் கட்டப்பட்ட நியாய விலை கடைகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான்ஷிநிகம், கூட்டுறவு இணைப் பதிவாளர் குருமூர்த்தி, மாநகராட்சி மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி மிசாபாண்டியன், கவுன்சிலர் கார்த்திக் உள்பட பல பங்கேற்றனர்.

Media: Dinakaran